திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன், கடந்த மாதம் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், இன்று மீண்டும் உடல்நலக்குறைவுக் காரணமாக துரைமுருகன் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................