இடைத் தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையம்… கடுகடுக்கும் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடத்துவதை, தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
இடைத் தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையம்… கடுகடுக்கும் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் ஆணையத்தின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார் மு.க.ஸ்டாலின்


Chennai: 

தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடத்துவதை, தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கின்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகியவற்றுடன், சட்டமன்றத்தை தன்னிச்சையாகக் கலைத்துக் கொண்ட தெலங்கானாவுக்கும் சேர்த்து 5 மாநிலத் தேர்தல்களுக்கான அட்டவணையை, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.பி.ரவத் வெளியிட்டிருக்கிறார்.

அதேபோல், கர்நாடகாவில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும், மூன்று எம்.பி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தலைச் சந்திக்கின்ற திருவாரூர் - திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தேதி அவருடைய அறிவிப்பில் இடம்பெறவில்லை. இரண்டு தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்திருப்பது, ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில், தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை தமிழ்நாட்டு மக்களின் மனதில் விதைத்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு தொகுதி இடைத்தேர்தலை, பருவ மழையைக் காரணம் காட்டித் தள்ளி வைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் அவர், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் தேர்தலே நடந்ததில்லையா? ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது நடைபெற்ற 3 தொகுதிக்கான தேர்தல்கள் பருவமழைக் காலமான நவம்பர் மாதத்தில்தானே நடைபெற்றன.

அதுபோல ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலும் மழைக்காலத்தை ஒட்டிய டிசம்பர் மாதத்தில்தானே நடந்தது? தற்போது 5 மாநிலத் தேர்தல்கள் நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், 2 தொகுதி இடைத்தேர்தலை மட்டும் மழையின் காரணமாகத் தள்ளி வைக்க வேண்டிய அவசியம் என்ன?

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என கிராமப்புறங்களில் சொல்வதுபோல, மத்திய -மாநில ஆளுங்கட்சிகளுக்கு தேர்தல் களம் சற்றும் சாதகமாக இல்லை - படுதோல்வி நிச்சயம் என்பதால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

சுயாட்சிமிக்க அமைப்பான இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும் - அரசு நிர்வாகத்தைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய தலைமைச் செயலாளரும் மத்திய - மாநில ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறுகிறார்களோ என்ற சந்தேகத்தை நீக்கும் வகையிலும், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படும் விதத்திலும் திருவாரூர் -திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்திட வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்!’ என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................