'மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்கு' - கே.பி.பி. சாமியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

தி.மு.கவின் சுறுசுறுப்பான தொண்டராகவும், மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் திரு கே.பி.பி.சாமியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

'மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்கு' - கே.பி.பி. சாமியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

உடல்நல பாதிப்பால் திமுகவின் திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி இன்று காலை உயிரிழந்தார்.

ஹைலைட்ஸ்

  • 2 முறை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்தவர் கே.பி.பி. சாமி
  • 2006 - 2011 -ல் மீன் வளத்துறை அமைச்சராக கே.பி.பி. சாமி இருந்தார்
  • கடந்த ஆண்டு விக்ரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகத் திகழ்ந்தவர் என்று இரங்கல் வெளியிட்டுள்ளார்.

திமுகவின் திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி இன்று காலை உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். 57 வயதாகும் அவர், நுரையீரல் பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

திமுக ஆட்சியிலிருந்தபோது கடந்த 2006 - 11-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராக கே.பி.பி. சாமி பொறுப்பிலிருந்தார்.

சட்டமன்றத்திற்கு முதன்முறையாகக் கடந்த 2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் அவர் 2016-தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 

இந்த நிலையில், சாமியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், தி.மு.கவின் சுறுசுறுப்பான தொண்டராகவும், மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் திரு கே.பி.பி.சாமியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,மீனவ சமூகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Listen to the latest songs, only on JioSaavn.com