என்னவாகும் கருணாநிதி வாழ்ந்து வந்த கோபாலபுரம் வீடு..?

எழை எளிய மக்களுக்கான மருத்துவமனை கட்டிக் கொள்ள வீடு பயன்பட வேண்டும் என்றும் அவர் வழிகாட்டியுள்ளார்

என்னவாகும் கருணாநிதி வாழ்ந்து வந்த கோபாலபுரம் வீடு..?
Chennai:

கருணாநிதி தனது வாழ்நாளின் பெரும் பகுதியை வாழ்ந்து வந்த கோபாலபுரம் இல்லத்தை, தனது மற்றும் தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ள கடந்த 2010 ஆம் ஆண்டே அனுமதி அளித்தார். 

கருணாநிதி வாழ்ந்து வந்த கோபாலபுரம் இல்லத்தை, அவர் கடந்த 1955 ஆம் ஆண்டு வாங்கினார். 1968 ஆம் ஆண்டு தனது மகன்களான மு.க.ஸ்டாலின், அழகிரி மற்றும் தமிழரசு பெய்ரகளில் பதிவு செய்தார். 2009 ஆம் ஆண்டு, மருத்துவமனை கட்டிக் கொள்வதற்காக அவர்களின் ஒப்புதலைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டு, தனது மற்றும் தனது மனைவியின் இறப்புக்குப் பின்னர் கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனையாக பயன்படுத்திக்கச் சொல்லி அனுமதி அளித்துள்ளார். 

கருணாநிதி, ‘அன்னை அஞ்சுகம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு 2010 ஆம் ஆண்டு, வீட்டை எழுதி வைத்தார். எழை எளிய மக்களுக்கான மருத்துவமனை கட்டிக் கொள்ள வீடு பயன்பட வேண்டும் என்றும் அவர் வழிகாட்டியுள்ளார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)