4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டன.

கடைசி நாளான இன்று அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்தவர்களில் அதிகப்பட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 42 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 98 வேட்புமனுக்களில் 62 வேட்புமனுக்கள் சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 4 தொகுதிக்குமான வேட்பாளர்கள் பெயர்களை திமுக ஏற்கனவே அறிவித்ததுள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட டாக்டர்.சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார். சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அதிமுக சார்பில் சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.முனியாண்டி, ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................