அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி! - ஓபிஎஸ் தகவல்

அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி! - ஓபிஎஸ் தகவல்

தமிழகத்தில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. இந்த கூட்டணியில் தேமுதிகவையும் இடம்பெற வைக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்காக அதிமுக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் என மாறி மாறி இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் விஜயகாந்தை சந்தித்து வருகின்றனர் இருப்பினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வந்தது.

எனினும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது வரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் இன்று அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார்.

இந்த பொதுக்கூட்ட மேடையில் இன்று காலை வரை விஜயகாந்த் படம் இடம்பெறாத நிலையில், தற்போது கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. அதுதவிர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் படமும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக தலைவர்கள் சற்றுநேரத்தில் தம்மை சந்திக்க வர உள்ளனர் என்று கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................