துரைமுருகனுடன் பேசியது என்ன? தேமுதிக விளக்கம்

திமுக பொருளாளர் துரைமுருகனுடனான நேற்றைய தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை முருகேசன் மற்றும் இளங்கோவன் துரைமுருகனை சந்தித்தது அவர்களது சொந்த காரணங்களுக்காக என தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
துரைமுருகனுடன் பேசியது என்ன? தேமுதிக விளக்கம்

முன்னதாக, நேற்று தேமுதிக நிர்வாகிகள், திமுக பொருளாளர் துரைமுருகனை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பு முடிந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், ‘தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் கூட்டணியில் வருவது குறித்துதான் பேசினர். எங்களுக்கும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. இனி கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டேன்' என தெரிவித்தார்.

இதுதொடர்பாக சுதீஷிடம் கேட்டபோதும், ஆம் துரைமுருகனுடன் கூட்டணி குறித்து பேசினோம். அதிமுக- பாமக இடையில் தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தான அதே நாளில்தான் நாங்கள் திமுக பொருளாளர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்' என்று கூறியிருந்தார். 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ஒரே மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். துரைமுருகனுடனான நேற்றைய தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை முருகேசன் மற்றும் இளங்கோவன் துரைமுருகனை சந்தித்தது அவர்களது சொந்த காரணங்களுக்காகவே. 

ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் பேசக்கூடாதா? அதுபோல், நான் 10 நாட்களுக்கு முன் துரைமுருகனுடன் பேசினேன், நேற்று பேசவில்லை. ஆனால் ஊடகங்களில் நேற்று நான் அளித்த பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, நேற்று துரைமுருகனிடம் பேசியதாக கருதப்பட்டுவிட்டது. 

மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம். பாஜக - அதிமுக-வுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. ஓரிரு நாளில் தொகுதி குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................