This Article is From Oct 22, 2019

தீபாவளி விடுமுறை 3 நாளாக நீட்டிப்பு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அது வழக்கமான விடுமுறை தினமாக அமைந்துவிட்டது. இதனால், தீபாவளிக்கு முந்தைய தினமும், அடுத்த தினமும் விடுமுறை விடப்படுமா என மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.  

தீபாவளி விடுமுறை 3 நாளாக நீட்டிப்பு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

தீபாவளிக்கு அடுத்த நாளான 28-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில், அதற்கு அடுத்த நாளான 28-ம் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அது வழக்கமான விடுமுறை தினமாக அமைந்துவிட்டது. இதனால், தீபாவளிக்கு முந்தைய தினமும், அடுத்த தினமும் விடுமுறை விடப்படுமா என மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.  

இதனிடையே, தீபாவளிக்கு முந்தைய தினமான சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. எனினும் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது வெளியூரில் வசிப்பவர்களுக்கு சிரமமாக இருந்தது. தங்கள் சொந்த ஊருக்கு தீபாவளி தினத்தில் சென்று வர இந்த இரண்டு நாள் விடுமுறை போதாது என்ற நிலை நிலவியது. 

இதைத்தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் தீபாவளிக்கு அடுத்த நாளான 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தால் நல்லது என பலதரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. 

குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வெளியூர்களில் இருந்து திரும்பிவர ஒருநாள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமையும் 28ம் தேதியும் விடுமுறை என்று தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் சார்பில் நேற்றிரவு வெளியான அறிவிப்பில் இந்த கூடுதல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு விடுமுறை நாளான 9-11-2019 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட தீபாவளிக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததை தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

.