“தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள்”

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் அதிமுகவின் 18 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

“தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள்”

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் தினகரனின் ஆதரவாளர்கள்

Madurai:

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அதிமுகவை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், சபாநாயகர் தனபால் மேற்கொண்ட நடவடிக்கை செல்லும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று அவர்களின் ஒருவரான தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அம்மர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரனின் ஆதரவாளர்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com