ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு!

2017 ஆம் ஆண்டு பிப்ரவரில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு!

உட்கட்சிப் பூசல் காரணமாக, ஓ.பன்ன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின்11 எம்எல்ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டு பிப்ரவரில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின்11 எம்எல்ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். 

இதைத் தொடர்ந்து அதிமுக கொறடாவின் உத்தரவை மதிக்காமல் கட்சி மாறி வாக்களித்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

தகுதி நீக்க விவகாரத்தில் தமிழக சட்டசபை சபாநாயகரே உரிய முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று கூறி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், சபாநாயகரை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட முடியாது என்றும், அவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது நீதிமன்றம். 
 

More News