''ரிவியூ பார்த்து படம் பார்க்கும் நாம், வேட்பாளரை அறிந்துகொள்ள ஏன் முயற்சிக்கவில்லை !''

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்ற தலைப்பிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''ரிவியூ பார்த்து படம் பார்க்கும் நாம், வேட்பாளரை அறிந்துகொள்ள ஏன் முயற்சிக்கவில்லை !''

ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்தாலும் பணத்துக்கு ஓட்டை விற்காதீர்கள் என்கிறார் வெங்கட் பிரபு

ரிவியூ பார்த்து படம் பார்க்கும் நாம், தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை அறிந்து கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை என்று இயக்குனர் வெங்கட் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். 

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்ற தலைப்பிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது-

நாம போட்ற ஒவ்வொரு ஓட்டும் அடுத்த 5 வருஷத்துக்கு நாம சுவாசிக்கிற காற்று, சாப்பாடு, தண்ணீர் எல்லாத்தயும் நிர்ணயிக்கப் போகுது. வெறும் ஆயிரம், ரெண்டாயிரம்...

ஏன் ஒரு லட்சம், ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்தாலும் ஒட்டை விற்றுடாதீங்க.
உங்க கிட்ட காசு கொடுத்து ஓட்டு வாங்குற அவரு... அவரு சம்பாதிக்கணும்னு பார்ப்பாரா... இல்ல உங்களுக்கு நல்லது செய்யணும்னு பார்ப்பாரா? 

ஒரு படம் பார்க்கிறது என்றாலே 10 ரிவியூ பார்த்து படம் பார்க்கும் நீங்கள்... உங்க ஏரியால அடுத்த 5 வருஷத்துக்கு பிரதிநிதியா இருப்பவங்களோட கொள்கைகள், பயோடேட்டாவ ஒரு 5 நிமிஷத்துக்கு பாருங்க... 

இவ்வாறாக வெங்கட் பிரபு பேசுகிறார். அவரது வீடியோ வைரலாகி வருகிறது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................