This Article is From Jun 12, 2019

இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவரது ஆட்சி காலம்தான் இருண்ட காலம். டெல்டா பகுதியில் சாதிய கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது எனக் குறிப்பிட்டார்.

இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

சோழ மன்னனான ராஜராஜசோழன் குறித்து இயக்குநர் ரஞ்சித்  பேசிய பேச்சு தொடர் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.  இந்த பேச்சு தொடர்பாக ரஞ்சித் மீது இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல்செய்துள்ளார். திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில் ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவரது ஆட்சி காலம்தான் இருண்ட காலம். டெல்டா பகுதியில் சாதிய கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது எனக் குறிப்பிட்டார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் “ராஜ ராஜ சோழன் தொடர்பாக வரலாற்று உண்மைகளைத்தான் பேசினேன். பல்வேறு புத்தகங்களில் உள்ள தகவல்களை தெரிவித்தேன். நிலப்பறிப்பு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினேன். என்னைப் போலவே பலரும் பேசினர். ஆனால் என் பேச்சு மட்டுமே சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது. உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.” என்று ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

.