கேரள நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பின் மனு மீண்டும் நிராகரிப்பு

கடந்த ஆண்டு, பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பின் மனு மீண்டும் நிராகரிப்பு
Kochi:

கொச்சி: கடந்த ஆண்டு, பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார். நடிகையை கடத்திய போது காருக்குள் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ளன.

அதனை தொடர்ந்து, காரில் எடுக்கப்பட்ட காட்சிகளின் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி, வீடியோ காட்சிகளின் பிரதி தருமாறு திலீப் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. தொடர்ந்து மேல் முறையீடு செய்த திலீப்பின் மனுவை, மீண்டும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திலீப் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Listen to the latest songs, only on JioSaavn.com