2021-ல் Digital Census- அறிவிப்பு வெளியிட்டார் அமித்ஷா! (10 Facts)

Census 2021: வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் இனி அவர்களின் போனை வைத்தே கணக்கெடுப்பு செய்ய முடியும்.

2021-ல் Digital Census- அறிவிப்பு வெளியிட்டார் அமித்ஷா! (10 Facts)

இரண்டு கட்டங்களாக இந்த சென்சஸ் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • Amit Shah said mobile app will be used in Census 2021
  • National Population Register being prepared for first time in Census 2021
  • Last census was in 2011 when the population stood at 121 crore
New Delhi:

இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, ‘டிஜிட்டல் சென்சஸ்' ஆக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் தெரவித்துள்ளார். மொபைல் ஆப் மூலம் அந்த சென்சஸுக்குக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ள அவர், பாஸ்போர்ட், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சேர்த்த பன்நோக்கு அடையாள அட்டை குறித்தும் பேசியுள்ளார். 

இது குறித்த 10 ஃபேக்ட்ஸ்:

1.“மொபைல் செயலி மூலம் 2021 ஆம் ஆண்டிற்கான சென்சஸ் கணக்கெடுப்பு நடத்தப்படும். பேப்பர் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தற்போது டிஜிட்டலாக நடைபெறும்”- அமித்ஷா

2.ஒருவர் இறந்துவிட்டால், அதுவும் கணக்கெடுப்புக்குள் வரும்படி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் அமித்ஷா.

3.கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு செயலியை அரசு தரப்பு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

4.முதன்முறையாக தேசிய ஜனத்தொகை பதிவேடு, 2021 ஆம் ஆண்டு சென்சஸில் உருவாக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

5.இந்த 2021 ஆம் ஆண்டு சென்சஸுக்காக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நடத்தப்படும் 8வது சென்சஸ் இதுவாக இருக்கும். 

Newsbeep

6.வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் இனி அவர்களின் போனை வைத்தே கணக்கெடுப்பு செய்ய முடியும். 

7.வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு செய்ய 33 லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படுவார்கள். 

8.இரண்டு கட்டங்களாக இந்த சென்சஸ் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9.சென்சஸ் 2021-க்கு முன்னெடுப்பாக, ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு சோதனை ஓட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது இந்த மாத இறுதி வரை நடைபெறும். 

10.சென்சஸ் என்பது வெறுமனே மக்கள் கணக்கெடுப்பு மட்டுமல்ல. அதன் மூலம் பல்வேறு சமூக- பொருளாதார தரவுகள் கிடைக்கும். அதை வைத்துத்தான் அரசு தங்களது திட்ட கொள்கைகளை வடிவமைக்கும் என்று உள்துறை செயலர் ராஜிவ் கவுபா கூறியுள்ளார்.