முதல்வர் பதவி ராஜினாமா… சிவசேனாவுக்கு குட்டு… செய்தியாளர் சந்திப்பில் Devendra Fadnavisன் அதிரடி!

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக - சிவசேனா (BJP - Shiv Sena) கூட்டணி வெற்றி பெற்றது

BJP - Shiv Sena இடையில் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

Mumbai:

மகாராஷ்டிராவில் (Maharashtra) புதிய ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில், தற்போதைய முதல்வரான தேவந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis), தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து அதிரடியாக பேசினார். 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக - சிவசேனா (BJP - Shiv Sena) கூட்டணி வெற்றி பெற்றாலும், அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

“கடந்த 15 நாட்களில் சிவசேனாவின் அறிக்கைகள் மற்றும் கருத்துகள்… நாங்கள் எதையும் அவர்களிடத்தில் உறுதியளிக்கவில்லை. சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு கால ஆட்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேச ஒன்றும் இல்லை. நான் இருக்கும் வரை அது நடக்காது,” என்று செய்தியாளர்கள் சந்திப்பின் முதலிலேயே அதிரடி காட்டினார் ஃபட்னாவிஸ். 

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து, அதிகாரத்தில் சரிபாதி பகிர்வை வலியுறுத்தி, “50:50 ஃபார்முலா”-வை முன்மொழிந்தது சிவசேனா. ஃபட்னாவிஸ், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக இருக்கலாம் என்று கணக்கு போட்ட நிலையில், இந்த கோரிக்கை பாஜக-வை மிகவும் கடுப்பேற்றியது. அதே நேரத்தில் பாஜக, சிவசேனாவுக்கு, துணை முதல்வர் பொறுப்பு, சில முக்கிய அமைச்சகங்களைத் தர முன் வந்தது. ஆனால், இது அவர்களை சமாதானப்படுத்தவில்லை. 

“உத்தவ் தாக்கரேவுடன் எனக்கு நெருக்கமான உறவு உள்ளது. அவருடன் தனிப்பட்ட முறையில் பேச நானே முயன்றேன். பலமுறை நான் அவருக்கு போன் அழைப்பு விடுத்தும், எதற்கும் பதில் இல்லை. ஆனால், அவர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்,” என்று குற்றம் சாட்டியுள்ளார் ஃபட்னாவிஸ்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சொன்னதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது.

More News