இந்திய இன்ஜினியருக்கு விசா மறுப்பு... அமெரிக்க அரசு மீது வழக்கு!

ஹச்1பி விசா என்பது புலம்பெயர்ந்தவர்களுக்கான விசா அல்ல, அது அமெரிக்காவில் பணிபுரிபவர்களுக்கான விசா. இது அவர்களின் திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இந்திய இன்ஜினியருக்கு விசா மறுப்பு... அமெரிக்க அரசு மீது வழக்கு!

அனிசெட்டியும் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் தான்.

Washington:

அனிசெட்டி என்பவருக்காக சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனம் ஒன்று ஹச்1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளது. அதனை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது. அவரது வேலைப்படி அவர் ஹச்1பி விசாவுக்கு தகுதியற்றவர் என்று கூறப்படுகிறது. மேலும் நிராகரிப்புக்கு சரியான ஆவணங்களை சமர்பிக்காததே காரனம் என்று கூறியுள்ளனர். அந்த நிறுவனம் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது.

ஹச்1பி விசா என்பது புலம்பெயர்ந்தவர்களுக்கான விசா அல்ல, அது அமெரிக்காவில் பணிபுரிபவர்களுக்கான விசா. இது அவர்களின் திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசா மூலம் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து 10,000 பேரை வேலைக்கு அமர்த்துகிறது.

ஒரு நிதியாண்டில் ஹச்1பி விசா மட்டும் 65 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. முதல் 20,000 விண்ணப்பங்கள் அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

அனிசெட்டியும் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் தான். அவர் தற்போது தனது மனைவியின் ஹச்4 பிசா அவருக்கு நடப்பில் உள்ளது. 

2014 முதல் 2016 வரை எஃப் 1 எனும் புலம்பெயர்ந்தவர் அல்லாத நிலையில் மாணவராக பதிவு செய்து டெக்ஸாஸ் பலகலைக்கழகத்தில் படித்து வந்தார். 

அனிசெட்டி பணிபுரியும் நிறுவனத்தில் பிசினஸ் சிஸ்டம் அனலிஸ்ட் பதவியில் இருக்கிறார். ஹச்1பி விசாவுக்கு தகுதியுடைய பணியில் தான் இருக்கிறார். ஆனால் இதனை பிப்ரவரி 19, 2019ல் விசா மறுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனிசெட்டி பணிபுரியும் நிறுவனம் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆனால், அமெரிக்க குடியுரிமை அலுவலகம் அந்த இந்திய தொழில்நுட்ப பணியாளர் ஹச்1பி விசாவுக்கான தகுதியை எட்டவில்லை என்று கூறி நிராகரித்ததாக தெரிவித்துள்ளார். 

More News