This Article is From Feb 26, 2020

நள்ளிரவில் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்: தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைப்பு!

ஜேஎன்யூ மாணவர்கள் உள்ளிட்டோர் நள்ளிரவில் திடீரென கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அதிகாலை 3.30 மணி அளவில் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

நள்ளிரவில் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்: தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைப்பு!

Delhi Violence: மாணவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

ஹைலைட்ஸ்

  • நள்ளிரவில் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம்
  • தண்ணீர் பீய்ச்சி அடித்து மாணவர்களை போலீசார் கலைத்தனர்
  • வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
New Delhi:

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்றிரவு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜேஎன்யூ மாணவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். 

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு, ஜாமியா ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு மற்றும் ஜேஎன்யூ மாணவர்கள் உள்ளிட்டோர் நள்ளிரவில் திடீரென கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அதிகாலை 3.30 மணி அளவில் போராட்டக்காரர்களை கலைத்தனர். 

டெல்லியில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அதற்கு அனுமதி மறுத்த போலீசார் மாணவர்களை கலைந்த செல்ல வலியுறுத்தினர்.

qv3bhpl

ஜேஎன்யூ மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எனினும், மாணவர்கள் கலையாமல், அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து, மாணவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று சிறை வைத்து, பின்னர் விடுவித்ததாகவும் மாணவர்கள் குற்றம்ச்சாட்டியுள்ளனர். 

இதுதொடர்பாக மாணவர்கள் கோரிக்கையானது, வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதிகளை அந்த தொகுதி எம்எல்ஏக்களுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட வேண்டுமென்றும், பதட்டத்தை தணிக்க அங்கு அமைதியான அணிவகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், வன்முறையை தடுக்க டெல்லி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து குடிமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளை அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் முதலமைச்சரை வலியுறுத்தினர்.

இதேபோல், இந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். 

இதனிடையே, நேற்று மாலை நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் வைத்து முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை மேற்கொண்டார். 

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்தார். 

தொடர்ந்து, 3 நாட்களாக ஏற்பட்ட இந்த வன்முறையில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 190க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 
 

(Inputs from ANI and IANS)
 

.