போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ. 2 லட்சம் அபராதம்

ராஜஸ்தானில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ. 1,41,000 அபராதமும் ஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு ரூ. 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக  ரூ. 2 லட்சம் அபராதம்

ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஜிடி கர்னல் ரோட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.


New Delhi: 

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் 

மத்திய அரசால் திருத்தப்பட்ட போக்குவரத்து சட்ட விதியின் கீழ் ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு பல சட்ட விதிமீறலுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கு அதிக சுமை மற்றும் பிற போக்குவரத்து விதி  மீறல்களுக்கு 1.31 லட்சம் அபராதமும் உரிமையாளருக்கு ரூ. 69,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

செப்டம்பர் 1 முதல்  மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஜிடி கர்னல் ரோட்டில் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்த தொகையை லாரி உரிமையாளர் செலுத்தியதாக பி.டி.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ. 1,41,000 அபராதமும் ஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு ரூ. 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதால் அரசியல் கட்சிகள் பெரிய அபராத தொகையினை அறிமுகப்படுத்தியதற்கான மத்திய அரசை கண்டித்துள்ளன. 

மத்திய அரசின் விதிகளை நடைமுறை படுத்த வேண்டாம் என்று பல மாநிலங்கள் முடிவு எடுத்துள்ளன. மத்திய பிரதேசம், கேரளா, மற்றும் டெல்லி மாநிலங்கள் எதிர்கட்சியால் ஆளப்படுகின்றன. அந்த மாநிலங்களில் அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் இத்தகைய கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று நிராகரித்து விட்டார். பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடாக ஆகிய நாடுகளும் அபராதம் விதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளன.

 மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அபராதங்கள் தேவை என்று கருத்து தெரிவித்தார். சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் இழக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக அவை விதிக்கப்படுகின்றன என்று கூறினார். ஒரு ஆண்டுக்கு  1,50,000 பேர் சாலைகளில் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் 65 சதவீதம் பேர் 18-35 வயதுடையவர்கள் ஆவார். இந்த புதிய சட்டம் உயிர்களை காப்பாற்றவே செய்யப்பட்டது. இதற்கு மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தேவை என்று நிதின்கட்கரி கூறியுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................