5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி குறைக்கப்பட்ட டெல்லி காற்று மாசு!!

காற்று மாசுபாடு AQI எனப்படும் Air Quality Index என்ற அளவீட்டால் அளவிடப்படுகிறது. இது 201-300 என இருந்தால் மோசம் என்றும், 301 – 400-யை மிக மோசம் என்றும், 401 – 500 என இருந்தால் மிக மிக மோசமான பாதிப்பு என்றும் கருத்தில் கொள்ளலாம்.

5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி குறைக்கப்பட்ட டெல்லி காற்று மாசு!!

டெல்லியில் காற்றின் வேகமும் சற்று அதிகரித்திருப்பதால், காற்று மாசுபாடு சற்று குறைந்தது.

New Delhi:

5 லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி டெல்லி காற்று மாசை தீயணைப்புத் துறையினர் ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளனர். சனிக்கிழமை தொடங்கிய இந்த நடவடிக்கை நேற்றுடன் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியில் ரோகிணி, துவரகா, ஓக்லா ஃபேஸ் 2, பஞ்சாபி பாக், ஆனந்த் விகார், விவேக் விகார், வாசிர்பூர், ஜகாங்கிர்புரி, ஆர்.கே.புரம், பவானா, நரேளா, முண்டகா மற்றும் மாயாபு ஆகிய 13 பகுதிகள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்த இடங்களில் எல்லாம் 400-க்கும் அதிகமான தீயைணைப்பு வீர்ர்கள் குவிக்கப்பட்டு சுமார் 5 லட்சம் லிட்டம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதன் பின்னரே நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இதற்கிடையே டெல்லியில் காற்றின் வேகமும் சற்று அதிகரித்திருப்பதால், காற்று மாசுபாடு சற்று குறைந்தது.

சனிக்கிழமையன்று டெல்லியில் காற்று மாசுபாடு அளவிடப்பட்டபோது ‘மிக மோசம்' என்ற தரத்தில் காணப்பட்டது. ஆனால், தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட பின்னர் காற்று மாசு 312 புள்ளிகளில் இருந்து 234 புள்ளிகளாக குறைந்தது.

More News