டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!

கடந்த வாரம் NDTV க்கு அளித்த பேட்டியில், டெல்லியை சுத்தமாக வைத்துக் கொள்வதற்குத்தான் தனது ஆம் ஆத்மி கட்சி முன்னுரிமை அளிப்பதாக கூறியிருந்தார். சுத்தமான தண்ணீர், பெண்களுக்கான பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு தனது அரசு முன்னுரிமை அளிப்பதாக கூறியிருந்தார். 

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!

2015 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.

New Delhi:

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக் காலம் பிப்ரவரி 22-ம்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அங்கு தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். 

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 14-ம்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 8-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமை  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

c40ag67

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 11-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து தலைமை ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது-

பிப்ரவரி 8-ம்தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறும். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மொத்தம் 13 ஆயிரம் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படும். சுமார் 90 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை உயரவும் வாய்ப்பு இருக்கிறது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

டெல்லி சட்டமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகள் :

ஜனவரி 14 - மனுத்தாக்கல் தொடங்குகிறது.
ஜனவரி 21 - மனுத்தாக்கல் முடிகிறது.
ஜனவரி 22 - வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஜனவரி 24 - வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி.
பிப்ரவரி 8 - வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிப்ரவரி 11 - வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

3kta2018

கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  மாபெரும் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. அடுத்த இடத்தில் பாஜகவுக்கு 32.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் 9.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 

Newsbeep

கடந்த 2015-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 70-ல் 67 தொகுதிகளைக் கைப்பற்றி பிரமாண்ட வெற்றியை பெற்றது. 3 தொகுதிகள் பாஜக வசம் சென்றன. காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

rsneocmo

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி  அகற்றப்பட்டிருக்கும் சூழலில் தற்போது டெல்லியில் தேர்தல் வரவுள்ளது. ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அமைத்த கூட்டணியில் பாஜக வீழ்ந்தது. 

டெல்லியில் மொத்தம் 7 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனால், தற்போது நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

l9dac6uk

கடந்த வாரம் NDTV க்கு அளித்த பேட்டியில், டெல்லியை சுத்தமாக வைத்துக் கொள்வதற்குத்தான் தனது ஆம் ஆத்மி கட்சி முன்னுரிமை அளிப்பதாக கூறியிருந்தார். சுத்தமான தண்ணீர், பெண்களுக்கான பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு தனது அரசு முன்னுரிமை அளிப்பதாக கூறியிருந்தார். 

டெல்லி குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முழு நேர்மையுடன் தனது அரசு பணியாற்றி வருகிறது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 

சட்டமன்ற தேர்தலையொட்டி, தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வந்தது.டெல்லி பாஜகவில் மொத்தம் 7 முதல்வர் வேட்பாளர்கள் இருப்பதாக ஆம் ஆத்மி கிண்டல் செய்திருந்தது. 

இதற்கு பதில் அளித்திருந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், அதனை தலைமை விரைவில் தீர்மானிக்கும் என்றும் பதில் அளித்திருந்தார்.