This Article is From Apr 05, 2020

தொடர்பு தடமறிதல் பணியில் செல்போன் தரவுகளை பயன்படுத்தும் காவல்துறையினர்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது. அடையாளம் காண செல்போன் தரவுகளைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் பயன்படுத்திவருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினை கடந்திருக்கின்றது.

ஹைலைட்ஸ்

  • It is believed that 9,000 people attended the Delhi mosque event
  • Many of them travelled across India, setting off a surge in infections
  • The total number of coronavirus cases in the country has crossed 3000
New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினை கடந்திருக்கின்றது. மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதின் பகுதியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற நபர்கள் மூலமாக கொரொனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அரசு குறிப்பிட்டிருந்தது. முழு முடக்க நடவடிக்கைக்கு முன்பு நடைபெற்ற இந்த மாநாட்டில் சர்வ தேச அளவிலிருந்து இஸ்லாமியர்கள் பங்கெடுத்திருந்தனர். இதில் கொரோனா தொற்று ஏற்பட்ட நாடுகளிலிருந்தும் பலர் வந்திருந்தனர். தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கிட்டதட்ட ஆயிரம் பேர் இந்த மாநாட்டுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது. அடையாளம் காண செல்போன் தரவுகளைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் பயன்படுத்திவருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் 9000 பேர் பங்கேற்றிருந்தனர் என்று கருதப்படுகின்றது. இதில் அரசு அறிவுறுத்திய சமூக இடைவெளிகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரியவருகின்றது. மேலும், இதில் பங்கேற்றவர்கள் பின்னர் பல நாடுகளுக்குப் பயணித்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மார்ச் மாதத்தில் இப்பகுதியில் பதியப்பட்ட ஜி.பி.எஸ் அடையாளங்களைக் கொண்டு தற்போது அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் அடையாளம்காண முயல்கின்றனர். இந்த மேப்பிங் பணியில் பிற மாநில காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் மூலம் விமானப்படையைச் சார்ந்த ஒரு சார்ஜென்ட்டும் கண்டறியப்பட்டுள்ளார். அவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், தொடர்பு தடமறிதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சுற்றுலா விசாக்களில் வருபவர்கள் மதம் சார்ந்த விழாக்களில் பங்கேற்ற தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே இதில் பங்கேற்றதாக அடையாளம் காணப்பட்டுள்ள 900 வெளிநாட்டவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லிருந்து 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.