நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு!!

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகிமின் பக்தராக இவர் இருந்திருக்கிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு!!

டெல்லி முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

New Delhi: 

நாடாளுமன்றத்திற்குள் இன்று காலை கத்தியுடன் நுழைவதற்கு ஒருவர் முற்பட்டார். அவரை அங்கு பாதுகாவலில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் சாகர் இன்சா என்பதும், டெல்லியின் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகிமின் பக்தராக இவர் இருந்திருக்கிறார்.

அவரிடம் மத்திய புலனாய்வு அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். இன்சாவிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு அவர் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறார். அதனையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

எதற்காக அவர் கத்தியுடன் நுழைந்தார் என்ற விவரம் தெரியவரவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. 

(With inputs from ANI, IANS) சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................