சொத்து தகராறு : தந்தையை கொன்று சடலத்தை 25 துண்டுகளாக வெட்டிய மகன்!!

கொலை செய்த மகனுக்கு அவரது நண்பர்கள் 4 பேர் உதவியாக இருந்துள்ளனர். தந்தையின் உடலை 4 பைகளில் மகன் கொண்டு செல்ல முயன்றபோது பிடிபட்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சொத்து தகராறு : தந்தையை கொன்று சடலத்தை 25 துண்டுகளாக வெட்டிய மகன்!!

கைது செய்யப்பட்ட மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Delhi: 

ஹைலைட்ஸ்

  1. Aman Kumar, 22, arrested for killing father over property dispute
  2. Chopped his body into pieces, stuffed them in four bags
  3. Was caught on his way to dispose the body parts along with friends

சொத்து பிரச்னை தொடர்பாக தந்தையை கொன்று, அவரது சடலத்தை 25 துண்டுகளாக மகன் வெட்டிய சம்பவம் டெல்லயில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் சதாரா பகுதியை சேர்ந்தவர் சந்தேஷ் குமார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 

மூத்த மகன் அமானுக்கும், சந்தேஷ் குமாருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று தந்தை சந்தேஷ் குமாரை மகன் அமான் கொன்றுள்ளார். பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக தந்தையின் உடலை 25 துண்டுகளாக வெட்டி, அதனை 4 பேக்குகளில் அமான் அடைத்திருக்கிறார். இதற்கு அமானின் 4 நண்பர்கள் உதவியாக இருந்துள்ளனர். 

பேக்குகளில் சடலத்தை வெட்டி அடைத்த பின்னர், அவற்றை வெளியே கொண்டு சென்றபோது சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் 3 பேர் தப்பியோடிவிட்டனர். அமானும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................