This Article is From Jun 11, 2018

போராடுவது தவறில்லை, போராட்ட முறைதான் தவறு - டெல்லி உயர் நீதி மன்றம்

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மட்டுமின்றி,  பொது மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் - நீதிபதிகள்

போராடுவது தவறில்லை, போராட்ட முறைதான் தவறு - டெல்லி உயர் நீதி மன்றம்

போராட்ட முறை மீது தான் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது - நீதிபதிகள்

ஹைலைட்ஸ்

  • பணி நிரந்திரம் கோரி டெல்லி துப்புரவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்
  • சாஸ்திரி பவன் முன் குப்பகைகளை கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
  • இந்த போராட்ட முறை கண்டிக்கத்தக்கது என நீதிபதிகள் கண்டனம்
New Delhi: புதுடில்லி: போராட்டம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி சராசரி இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை. ஆனால், போராட்டம் செய்யும் போது, பொது சொத்துக்களை சேதம் செய்வது, அழிப்பது, சாலையில் குப்பைகளை கொட்டி போராட்டம் செய்வது  போன்ற செயல்கள் செய்ய சட்டத்தில் அனுமதி இல்லை என டில்லி உயர்நீதி மன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

புது டில்லியின் முனிசிப்பல் கவுன்சிலில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வரும் துப்புரவு தொழிலாளர்கள், ஊதிய உயர்வு கோரியும்,  பணி நிரந்தரம் செய்யக் கோரியும் கடந்த மே 24 ஆம் தேதி சாஸ்திரி பவன் மற்று இரயில் பவன் முன் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடத்தினர். இந்த செய்தியை ஊடகங்கள் வழியாக அறிந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேற் சொன்ன கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

"குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மட்டுமின்றி,  பொது மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றங்களாக பதிவிடப்படும்" என செயல் அமர்வு நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி எஸ்பி கார்க் ஆகியோர் கொண்ட குழு தெரிவித்தது.

"போராட்டங்கள் செய்ய அனுமதி உண்டு ஆனால், போராட்ட முறை குறித்த கேள்விகள் எழுப்ப வேண்டி உள்ளது" எனவும் அவர்கள் தெரிவித்தனர்..

“ போராட்டத்தின் ஒரு அங்கமாக குப்பைகளை கொட்டியுள்ளனர். அது மட்டும் இல்லாமல், காவல் நிலையம், பேருந்து, இரயில் போன்ற பொதுச் சொத்துக்களை தாக்குவதற்கும் அனுமதி இல்லை. அவை குற்றச் செயல்களாக வழக்கு பதியப்படும்” என நீதிபதிகள் குழு தெரிவித்தது.

பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள செய்திகளை வைத்து பொது நல வழக்கு தொடர உள்ளதாகவும் நீதிபதிகள் குழு அறிவித்ததுள்ளது.

புது டில்லி முனிசிப்பல் கவுன்சில் சேர்மேன் இது குறித்து, ஜூலை 16ஆம் தேதிக்குள், போராட்டத்தில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களின் தகவல்களை சம்ர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் சங்கத் தலைவர், ரவிந்தர் நாத் பாரதிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளத

மே 24 ஆம் தேதி நடத்தப்பட்ட‌ போராட்டத்தில், முக்கியமான இடங்களில் குப்பைகளை கொட்டியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மே 25 ஆம் தேதி போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த மாதிரியான போராட்டங்களை துப்புரவு பணியாளர்கள் கையில் எடுப்பது இது முதல் முறையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு டில்லி முனிசிப்பல் கவுன்சில் துப்புரவு பணியாளர்கள், சாலைகளில் குப்பைகளைக் கொட்டி, தனியார் நிறுவனம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களை, வேலை செய்யவிடாமல் போராட்டம் நடத்தினர். பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்பதை எதிர்த்தும் போராடினர். அப்போதும் உயர் நீதிமன்றம் தலையிட்டு கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.
 Click for more trending news


.