This Article is From Jun 16, 2020

டெல்லியில் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு? மருத்துவமனையில் அனுமதி!

டெல்லியில் காய்ச்சல், சுவாசக் கோளாறு காரணமாக சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

டெல்லியில் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு? மருத்துவமனையில் அனுமதி!

டெல்லியில் காய்ச்சல், சுவாசக் கோளாறு காரணமாக சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

ஹைலைட்ஸ்

  • சுவாசக் கோளாறு காரணமாக சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
  • அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
  • வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
New Delhi:

டெல்லியில் கடும் காய்ச்சல், சுவாசக் கோளாறு காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது ட்விட்டர் பதிவில், நேற்றிரவு கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தொடர்ந்து, அடுத்தடுத்த தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 

முன்னதாக, நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்ற அனைத்து கட்சியினர் கூட்டத்தில் சத்யேந்தர் ஜெயினும் பங்கேற்றிருந்தார். 

இதனிடையே, கடந்த வாரம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் தனது வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். எனினும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. 

நாட்டிலே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு ஒட்டுமொத்தமாக 42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

.