This Article is From Aug 04, 2018

போலி இணையத்தளம் மூலம் ஐபோன் விற்பதாக கூறி பண மோசடி

குறைந்த விலையில் ஐபோன் விற்பதாக கூறி பண மோசடி செய்த நபரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

போலி இணையத்தளம் மூலம் ஐபோன் விற்பதாக கூறி பண மோசடி
Mumbai:

மும்பை: குறைந்த விலையில் ஐபோன் விற்பதாக கூறி பண மோசடி செய்த நபரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

டில்லி சுல்தான்பூர் நகரைச் சேர்ந்த 23 வயது ரித்தீஷ்குமார் ராம்வீர் என்பவர், ஐபோன் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். பி.காம் பட்டதாரியான இவர், குறைந்த விலையில் ஐபோன் வாங்கி தருவதாக கூறி 4 போலி இணையத்தளங்களை உருவாக்கியுள்ளது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, சேதமடைந்த செல் போன்களை விற்று வந்துள்ளர். மேலும், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஷாப்பிங் இணையத்தளங்களில் போலி விளம்பரம் செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து, மோசடி நபரை தேடி வந்த காவல் துறையினர், டில்லியில் குடி கொண்டிருந்த ரித்தீஷ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 45 சிம்-கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல் துறை அதிகாரி ரஷ்மி யாதவ் தெரிவித்துள்ளார்.

தற்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உள்ள ரித்தீஷ்குமாரிடன் மோசடி குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.