டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யு. வார்டு அருகே தீ விபத்து!! நோயாளிகள் வெளியேற்றம்!

தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி இதே மருத்துவமனையில் மற்றொரு கட்டிடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


New Delhi: 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யு. வார்டு அருகே தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. புகை மூட்டம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனையின் முதல் தளத்தில் தீ விபத்து நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற விபரம் தெரியவில்லை. இருப்பினும், தீ விபத்தால் எழுந்த புகை 2-வது தளத்திற்கும் பரவி வருகிறது. அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 7-8 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக இதே மருத்துவமனையின் மற்றொரு கட்டிடத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................