This Article is From Feb 11, 2020

டெல்லி தேர்தல்: காங்கிரஸை வகைதொகை இல்லாமல் சாடிய நெட்டிசன்… ஒற்றை வார்த்தையில் அதிரவிட்ட குஷ்பு!

Delhi Election Results 2020: 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ், டெல்லியில் தொடர்ந்து 3 முறை வென்று ஆட்சி அரியணை ஏறியது.

டெல்லி தேர்தல்: காங்கிரஸை வகைதொகை இல்லாமல் சாடிய நெட்டிசன்… ஒற்றை வார்த்தையில் அதிரவிட்ட குஷ்பு!

Delhi Election Results 2020: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளில் ஒருவரான நடிகை குஷ்பு, டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக பதிவிட்டு வரும் தொடர் ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

Delhi Election Results 2020: டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, முந்தைய சட்டமன்றத் தேர்தலைவிட அதிக இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ், டெல்லியில் தொடர்ந்து 3 முறை வென்று ஆட்சி அரியணை ஏறியது. ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகளில் காங்கிரஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளில் ஒருவரான நடிகை குஷ்பு, டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக பதிவிட்டு வரும் தொடர் ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

2015 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி, மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் 67-ல் வெற்றியடைந்தது. மீதமிருந்த 3-ஐ பாஜக கைப்பற்றியது. 

இன்றைய தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ், சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் பல இடங்களில் மல்லுக்கட்டி வருகின்றன. இந்த சூழலுக்குக் காரணம் காங்கிரஸ் என்றும் ஒரு சாரர் கிண்டல் செய்து வருகின்றனர். 

தேர்தல் முடிவுகள் வந்துள்ளதைத் தொடர்ந்து குஷ்பு, “டெல்லியில் காங்கிரஸுக்கு மேஜிக் நடந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. மீண்டும் காங்கிரஸுக்கு சுழியம். நாம் போதுமான வேலை செய்கிறோமா? நாம் சரியானவற்றைச் செய்கிறோமா? நாம் சரியான பாதையில் இருக்கிறோமா? இல்லை என்பதுதான் பதில். நாம் இப்போது வேலை செய்ய வேண்டும். இப்போது அல்லது எப்போதும் இல்லை. அடிமட்டத்தில், நடுவில் மற்றும் உயர்மட்டத்தில். எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும்.

அதே நேரத்தில் மோடி - ஷா குண்டர்கள் கூட்டணியை மக்கள் நிராகத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார். 

அவரின் இந்தப் பதிவுக்கு ஒருவர், “அரசியல் என்பது 24/7 நேரத்துக்கான பணி. உங்கள் கட்சிக்கு மூர்க்கத்தனம் இல்லை, வீரியமான செயல்பாடு இல்லை, தெளிவான பார்வையும் இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார். 

அதற்கு குஷ்பு, “ஒப்புக் கொள்கிறேன்” என்று ரிப்ளை போட்டு அதிரவிட்டுள்ளார். 

.