காவல்துறை அதிகாரி மெட்ரோ ரயில் முன்பு குதித்து தற்கொலை

அஜய் குமார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

காவல்துறை அதிகாரி மெட்ரோ ரயில் முன்பு குதித்து தற்கொலை

அஜய் குமார் டெல்லி காவல் துறையின் தகவல் தொடர்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டார். (Representational)

New Delhi:

45 வயதுடைய துணை ஆய்வாளர் காவல்துறை அதிகாரி மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அஜய் குமார் டெல்லி காவல் துறையின் தகவல் தொடர்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டார். 

அவரின் சொந்த ஊர் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள காங்கரா மாவட்டமாகும். அஜய் குமார் பிப்ரவரி 2 முதல் மார்ச் 4 வரை மருத்துவ விடுப்புக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். 

விடுப்பு முடிந்து வேலையில் சேருவதற்கு முன் மேலும் 1 மாத காலம் விடுப்பு கேட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். ஜஹாங்கிர்புர் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

அடிபட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழ்ந்து விட்டதாக தெரிவித்தனர் என்று துணை போலீஷ் கமிஷ்னர் முகமது அலி தெரிவித்தார். 

தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அஜய் குமார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.