டெல்லி தேர்தல்: அமித் ஷா - அரவிந்த் கெஜ்ரிவால் இடையே நீடிக்கும் வார்த்தை போர்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி அரசும் இலவச வை-பை மற்றும் மின்சார மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.

டெல்லி தேர்தல்: அமித் ஷா - அரவிந்த் கெஜ்ரிவால் இடையே நீடிக்கும் வார்த்தை போர்!

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

New Delhi:

டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே சமூகவலைதளங்களில் இன்று காலை முதல் வார்த்தை போர் நடந்து வருகிறது. 

ஆம் ஆத்மி அறிவித்துள்ள இலவச வை-பை சேவை குறித்தும், மாணவர்ளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி கேமரா வசதி உள்ளிட்டவை குறித்து பாஜக மூத்த தலைவர் விமர்சித்ததை தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் கெஜ்ரிவால் தனது ட்வீட்டரில் பதிவிட்டு வருகிறார். 

இதுதொடர்பாக நேற்றிரவு டெல்லி பாஜக தனது ட்வீட்டர் பதிவில், டெல்லி அரசால் வழங்கப்பட்ட இலவச வை-பை வசதியை மத்திய உள்துறை அமைச்சரால் பெற முடியவில்லை என்றும் வை-பை இணைப்பை தேடி தேடி அவரது போனில் சார்ஜிங் இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஒருசில மணி நேரத்தில் அதற்கு பதிலளிக்கும் வகையில் கெஜ்ரிவால் தனது ட்வீட்டரில் கூறியதாவது, மிஸ்டர் ஷா எனது அரசு போன்களுக்கு இலவச சார்ஜிங் நிலைய வசதியையும் அளித்து வருகிறது. 

இலவச வை-பை வசதியுடன் இலவச சார்ஜிங் நிலையங்களையும் கொண்டுள்ளோம். இதற்காக உள்துறை அமைச்சர் மின்சார கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஏனென்றால், தனது அரசு டெல்லி குடிமகன்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

g6o1vnfo

டெல்லி மாட்டியாலா பகுதியில் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

இதனிடையே, கடந்த தேர்தலில் 1,041 அரசு பள்ளிகளில் 1.2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என கடந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதி குறித்தும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதுதொடர்பாக டெல்லி பாஜக தனது ட்வீட்டரில், ஒரு சில கேமராக்களை பொருத்தி விட்டு ஆம் ஆத்மி கட்சி மக்களை முட்டாள் ஆக்குவதாக அமித் ஷா குற்றம்சாட்டியதாக குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ஒரு சில சிசிடிவி கேமராக்கள் இருப்பதை கண்டறிந்ததற்கு அமித் ஷா மற்றும் பாஜகவுக்கு நன்றிகள். 

ஒருசில நாட்களுக்கு முன்பாக ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தவில்லை என்று கூறிய பாஜக தற்போது ஒரு சில கேமராக்களை மட்டும் பொருத்தியுள்ளதாக கூறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நாங்கள் அதனை பள்ளிகளில் இருப்பதையும் காட்டுகிறோம்? என்று பதிலடி கொடுத்துள்ளார். 

டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இரண்டு பெரும் அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் இருவரும் ஒரே பகுதியில் பக்கத்து பக்கத்து பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

டெல்லி சட்டமன்ற தேர்தலானது வரும் பிப்.8ம் தேதி நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இதில் இரண்டாவது முறையாக வெற்றியை எதிர்ப்பார்க்கிறது. கடந்த 2015 தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை 70 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. 

இதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி அரசும் இலவச வை-பை மற்றும் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Listen to the latest songs, only on JioSaavn.com