This Article is From Jan 23, 2020

டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மியை எதிர்கொள்ள 40 நட்சத்திர பேச்சாளர்களை களத்தில் இறக்குகிறது பாஜக!

Delhi Assembly 2020 Elections: பெரும்பாலான நட்சத்திர பேச்சாளர்கள் டெல்லிக்கு வெளியே உள்ளவர்கள் ஆவர். இதனை சுட்டிக்காட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சி பிரசார யுக்திகளை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மியை எதிர்கொள்ள 40 நட்சத்திர பேச்சாளர்களை களத்தில் இறக்குகிறது பாஜக!

நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை எதிர்கொள்வதற்காக பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி, அங்கு 40 நட்சத்திர பேச்சாளர்கள் பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இங்கு கடந்த 2015-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பாஜக மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்தநிலையில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், ஹர்ஷ வர்தன், விஜய் கோயல், கட்சியின் புதிய தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோன்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங்சவுகான், அர்ஜுன் முண்டா ஆகியோரும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

பெரும்பாலான நட்சத்திர பேச்சாளர்கள் டெல்லிக்கு வெளியே உள்ளவர்கள் ஆவர். இதனை சுட்டிக்காட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சி பிரசார யுக்திகளை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்திருந்தார். பாஜகவை கிண்டல் செய்திருந்த ஆம் ஆத்மி கட்சி, பாஜகவுக்கு 7 முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

:

பாஜகவில் இளைஞர் அணிதலைவர் சுனில் யாதவுக்கு கடைசி நேரத்தில்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

தனக்கு தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அது தனது அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று கூறிய அவர், மாற்று தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது வேண்டுகோள் புதிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவால் நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த யாதவ், ‘நான் உள்ளூரை சேர்ந்தவன் என்பதால் எனக்கு போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. இது மண்ணின் மைந்தனுக்கும், வெளியூர்காரருக்கும் இடையே நடக்கும் போட்டி' என்று கூறினார்.

  

.