This Article is From Jan 22, 2020

டெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்!!

Delhi Assembly Election 2020: அரவிந்த் கெஜ்ரிவால் சாலை வழியான பேரணியை வால்மீகி மந்திரில் தொடங்கினார். ஆம் ஆத்மி தொண்டர்கள் கையில் கட்சி சின்னமான துடைப்பத்துடன் சூழ்ந்திருக்க புதுடெல்லி சட்டமன்ற தொகுதிக்குள் கெஜ்ரிவால் வந்தார்.

டெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்!!

Delhi Assembly Election 2020: புதுடெல்லி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக களம் இறங்குகிறார் கெஜ்ரிவால்.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் சுமார் 6மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

அவர் போட்டியிடும் புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் ஏராளமான சுயேச்சைகள் களம் காண்கின்றனர். நேற்று அவர் மனுத்தாக்கல் செய்யவிருந்த நிலையில் பேரணி காரணமாக அந்த நிகழ்வு தள்ளிப் போனது. 

வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். ஆனால் இன்றைக்கு சுமார் 100 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்திருந்தனர். அவர்களில் 40க்கும் அதிகமானோரை பாஜக வேண்டுமென்றே அனுப்பி, கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்வதை தடுக்க முயன்றதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

முன்னதாக மதியம் 2.36 க்கு ட்வீட் செய்த கெஜ்ரிவால், 'நான் எனது வேட்புமனுவை தாக்கல் செய்ய காத்திருக்கிறேன். எனக்கு 45-வது எண் டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது. பலர் இங்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ய காத்திருக்கின்றனர். ஜனநாயகத்தில் பலர் போட்டியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியிருந்தார். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு மாலை 6.30-க்கு வெளியே வந்தார். 
 

.

தாமதம் ஆன போதிலும், மதியம் 3 மணிக்கு முன்பு வந்தவர்கள் அனைவரது வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படும் என்பதால், கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. 

இந்த நிகழ்வு குறித்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவில், 'சுமார் 45 பேரை வேண்டுமென்றே பாஜக இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையமும் வேண்டுமென்றே ஒவ்வொரு வேட்பாளருக்கும் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது. அவர்களில் சிலர் முழுமையாக படிவத்தை நிரப்பவில்லை. சிலர் உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை' என்று கூறியுள்ளார். 

இன்னொரு ட்விட்டில், 'பாஜக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அக்கட்சியால் கெஜ்ரிவாலின் வேட்பு மனுத்தாக்கலையோ, அவர் முதல்வர் ஆகுவதையோ தடுக்க முடியாது. பாஜகவின் சதி வெற்றி பெறாது' என்று தெரிவித்துள்ளார். 
 

red5q7eoடெல்லியில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்

.

வேட்பாளர்கள் பலர் மத்தியில் கெஜ்ரிவால் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளி வந்துள்ளன. 

வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தவர்களில் ஒருவர், 'கெஜ்ரிவாலை உள்ளே செல்ல விட மாட்டேன்' என்கிறார். அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

மற்றொருவர், 'கெஜ்ரிவாலுக்கு வேறு வழியே கிடையாது. எங்களைப் போல் வரிசையில் அவர் நிற்க வேண்டும். அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கம் ஆரம்பித்தபோது அதில் இருந்த கெஜ்ரிவால் ஹசாரேவுக்கு துரோகம் செய்து விட்டார்' என்று கூறுகிறார். 

இன்னொரு நபர், தான் சுமார் 30 பேருடன் வந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்போவதாகவும் கூறுகிறார்.

வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அனைத்து படிவங்களை பூர்த்தி செய்த பின்னரும், அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வது தாமதம் ஆகியுள்ளது. கெஜ்ரிவால் புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக களத்தில் உள்ளார்.

கெஜ்ரிவால் நேற்றே வேட்பு மனுத்தாக்கல் செய்வதாக இருந்தது. நேற்று பிரமாண்ட பேரணியில் அவர் பங்கேற்றதால் அது முடியாமல் போனது.

நேற்று பேரணியின்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நான் இன்றைக்கு மனுத்தாக்கல் செய்யவிருந்தேன். ஆனால் இப்படிப்பட்ட பேரணியை விட்டுச் செல்வதற்கு என் மனம் விரும்பவில்லை. இதனால் நாளை நான் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறேன்' என்று கூறினார். 

அரவிந்த் கெஜ்ரிவால் சாலை வழியான பேரணியை வால்மீகி மந்திரில் தொடங்கினார். ஆம் ஆத்மி தொண்டர்கள் கையில் கட்சி சின்னமான துடைப்பத்துடன் சூழ்ந்திருக்க புதுடெல்லி சட்டமன்ற தொகுதிக்குள் கெஜ்ரிவால் வந்தார்.

டெல்லியில் பிப்ரவரி 8-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 11-ம்தேதி அறிவிக்கப்படுகிறது. 
 

.