''விமானப்படை தாக்கியதில் பாகிஸ்தான் மக்கள் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை''

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

மிராஜ் ரக விமானங்கள் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை பாலகோட்டில் வீசின.


New Delhi: 

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14-ம்தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். புல்வாமாவில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- 

பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இது ஒரு ராணுவ தாக்குதல் அல்ல. தீவிரவாதிகளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மட்டுமே அழிக்கப்பட்டனர். மக்களில் எவரும் கொல்லப்படவில்லை. 

5pcsk6d

 

பாலக்கோட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய வெளியுறவு செயலர் தகவல் தெரிவித்துள்ளார். அபிநந்தன் பணிக்கு திரும்புவது குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், விமானப்படையும்தான் முடிவு செய்வார்கள். 

ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................