கடனில் தத்தளிக்கும் பஞ்சாப் அரசு: சொகுசு கார் வாங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

அரசின் செலவுகளை குறைக்க, அரசு அலுவலகங்களில் டீ கொடுத்து வரும் வழக்கத்தை நிறுத்திய நிதித்துறை, சொகுசு கார்கள் வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கடனில் தத்தளிக்கும் பஞ்சாப் அரசு: சொகுசு கார் வாங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

அமரிந்தர் சிங், மாநில அரசு ஹெலிகாப்டரில் பறப்பவர் என்று மக்களால் அறியப்படுபவர்.


Chandigarh: 

கடன்களில் தத்தளிக்கும் பஞ்சாப் அரசால் ஊதியம் வழங்க முடியாமலும், ஓய்வூதியர்களுக்கு பென்சன் வழங்க முடியாமலும், மானியங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமலும், சமூக நலத்திட்டங்களை சரியான நேரத்திற்கு செயல்படுத்த முடியாமலும் தவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அதிகாரிகளுக்கு ரூ.100 கோடியில் சொகுசு கார்களை வாங்க முனைந்துள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான முதலமைச்சர், அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு 400 சொகுசு கார்களை வாங்குவதற்கு பஞ்சாப் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பஞ்சாப் அரசு ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளது. 

முதலமைச்சருக்கு 16 லேண்ட் க்ரூஸர்ஸ் (2 குண்டு துளைக்காத) கார்கள், அவரின் அதிகாரிகளுக்கு 13 ஸ்கார்பியோ கார்கள், சிறப்பு பணி அதிகாரிகளுக்கு 14 மாருதி டிசையர், எர்ட்டிகா, ஹோண்டா அமேஸ் கார்கள்.

இதை தவிர்த்து அமரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில் 17 அமைச்சர்களுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும், 97 எம்.எல்.ஏக்களுக்கு இன்னோவா கிரிஸ்டாஸ் கார்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை முதலமைச்சருக்கு 8 அம்பாஸ்டர் மற்றும் மோன்டரோஸ் கார்கள் உள்ளன. அமைச்சர்களுக்கு டொயோட்டா கேம்ரைஸ் கார்கள் உள்ளன. இன்னோவா கார்கள் பயன்படுத்தி வந்த ஏம்.எல்.ஏக்களுக்கும் தற்போது கார்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 


 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................