ரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு! - #NewPhotos

கல்வீச்சை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ரஜினி உள்ளிட்டோர் அழைத்துச் செல்லப்பட்டனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு!  -  #NewPhotos

படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. தர்பார் பட ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது
  2. முதன்முறையாக ரஜினி - முருகதாஸ் தர்பாரில் இணைகின்றனர்
  3. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வருகிறது தர்பார்

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் மாணவர்கள் கற்களை வீசியதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

தர்பார் திரைப்படத்தின் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி ஒன்றில் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் கேரக்டரில் ரஜினி நடித்து வருகிறார். முதன் முறையாக சூப்பர் ஸ்டாரும், ஏ.ஆர். முருகதாசும் இணைந்திருப்பது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

u880h7b
e72s2f18
vq61285g

இந்நிலையில் மும்பை கல்லூரில் ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதனை அங்கிருந்த மாணவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் மாணவர்களை வெளியேற்றியதாக தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது இயக்குனர் முருகதாஸ் தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், படப்பிடிப்பு தளத்தில் கற்களை வீசி எறிந்துள்ளனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ரஜினி உள்ளிட்டோர் அழைத்துச் செல்லப்பட்டனர். 

கடைசியாக கடந்த 1992-ல் ரஜினி போலீஸ் வேடத்தில் 'பாண்டியன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். 25 ஆண்டுகளுக்கு தர்பாரில் போலீசாக வருகிறார் ரஜினி. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................