This Article is From Jul 19, 2018

மனைவிக்கு க்ரிஸ் ஹெம்ஸ்வோர்த்தின் பிறந்தநாள் பரிசு: சல்சா நடனம்

க்ரிஸ் ஹெம்ஸ்வோர்த் தன் மனைவியும் ஸ்பானிஷ் மாடலும் நடிகையுமான எல்ஸா படாகியின் பிறந்தநாளுக்கு சல்சா நடனம் கற்றுத் தந்து வாழ்த்து தெரிவித்தார்

மனைவிக்கு க்ரிஸ் ஹெம்ஸ்வோர்த்தின் பிறந்தநாள் பரிசு: சல்சா நடனம்

ஹைலைட்ஸ்

  • தன் மனைவிக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
  • மனைவிக்கு சல்சா நடனம் கற்றுத் தந்தார் அவர்.
  • க்ரிஸ் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
New Delhi:

க்ரிஸ் ஹெம்ஸ்வோர்த் தன் மனைவியும் ஸ்பானிஷ் மாடலும் நடிகையுமான எல்ஸா படாகியின் பிறந்தநாளுக்கு சல்சா நடனம் கற்றுத் தந்து வாழ்த்து தெரிவித்தார். இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளார் அவர். முதலில் தடுமாறினாலும் எல்ஸா பின்னர் சமாளித்துவிட்டார். " என் மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு சல்சா கற்றுக்கொடுத்தேன், பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே" என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் க்ரிஸ்.
 


2006ஆம் வருடம், டான்சிங் வித் ஸ்டார்ஸ் சீஸன் 5இல் அப்பி ராஸ் உடன் சேர்ந்து ஆடிய சல்சா நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. க்ரிஸ், எல்ஸா படாகியை 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.


 


எல்ஸா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் "நான் நேசிக்கும் மனிதர்களோடு கொண்டாடிய மிகச்சிறந்த பிறந்தநாள்" எனப் பதிவிட்டுள்ளார்.

 


நீங்கள் எப்போதாவது சோர்வாக இருந்தால் க்ரிஸ்இன் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குச்  செல்லுங்கள். உங்கள் மகிழ்ச்சிக்கு அவர் பக்கம் நிச்சயம் உத்தரவாதம் அளிக்கும்.

 

 

 

 

 

 

 

 

.