This Article is From Nov 15, 2018

‘கஜா’ புயல்: முக்கியமான 10 தகவல்கள்!

’கஜா’ புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து, பாம்பன் மற்றும் கடலூருக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘மாநிலத்தில் இருக்கும் அணைகள், நதிகள் மற்றும் ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன’ என்று கூறியுள்ளார்.

Chennai:

‘கஜா' புயல் இன்று தமிழகத்தில் கரையைக் கடக்க உள்ளது. கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையில் கஜா கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘கஜா' என்பதற்கு சமஸ்கிரதத்தில் யானை என்று பொருள். புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த காற்றும் பெரு மழையும் பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகள் அலெர்ட்டில் இருக்கின்றன. இந்திய கடற்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க - "இன்று கரையைக் கடக்கும் ‘கஜா' புயல்: அலெர்ட்டில் தமிழகம், புதுச்சேரி!"

‘கஜா' குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:

  1. 'கஜா' புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து, பாம்பன் மற்றும் கடலூருக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
  2. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அலெர்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் 6,000 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, கேரளா மற்றும் அந்தாமான் நிக்கோபார் தீவுகளிலும் பேரிடர் மீட்புப் படை குழு உஷார் நிலையில் இருக்கின்றனர். 
  3. நேற்று இரவு நிலவரப்படி, கஜா புயல் நாகப்பட்டிணத்திலிருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சென்னையிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது கஜா.
  4. இன்று மதியம் கஜா புயலின் வீரியம் அதிகமாக இருக்கும் என்றும், இரவு அது குறைந்து மழை பொழிவு ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  5. 30,500 மீட்புப் படையினர் புயலின் தாக்கத்தை சமாளிக்க தயார் நிலையில் இருக்கின்றனர், தமிழக அரசு.
  6. நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளது வானிலை மையம்.
  7. கஜா புயலால் மின்சாரத் துண்டிப்பு ஏற்படலாம். விவசாயப் பயிர்களுக்கும் பெருமளவு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
  8. தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘மாநிலத்தில் இருக்கும் அணைகள், நதிகள் மற்றும் ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன' என்று கூறியுள்ளார். 
  9. நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் இடை விடாத தொடர்பை உறுதி செய்வோம் என்று மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
  10. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று, வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் கேட்டறிந்தார். 

.