திருவனந்தபுரத்தில் கடல் அரிப்பினால் வீடுகள் சேதமடைந்தன

. மக்கள் பலரையும் வீடுகளை விட்டு முகாம்க்கு செல்ல வலியுறுத்தப்படுகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS

வட தமிழகம் மற்றூம் தெற்கு ஆந்திர பிரதேசத்தை வந்து ஏப்ரல் 30 அன்று மாலை கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Thiruvananthapuram: 

 கேரளாவில் கடலோர மாவட்டங்களில் கடும் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. மக்கள் பலரையும் வீடுகளை விட்டு முகாம்க்கு செல்ல வலியுறுத்தப்படுகின்றன. வீடு சேதமடைந்ததற்கான காரணம் என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. இந்தியக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையினால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃபேனி புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் ஏப்ரல் 30 அன்று கரையைக் கடக்கும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் வலையத்ரா என்ற இடத்தில் சுமார் 15 வீடுகள் இடிந்துள்ளன. வீட்டின் உரிமையாளரான சிப்ம்சன் தன் வீட்டின் முன்பக்கச் சுவர் இடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றொருவர் சாலமன் அவரின் மனைவி லிஜித்தால் தன்னுடைய வீடு கணவரின் அப்பா கட்டியது என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன் வீட்டை பராமரிப்பு பணி பார்த்து கட்டியதாகவும் தெரிவித்தார். தற்போது அது இடிந்து விழுந்த நிலையில் அரசின் உதவியை நாடி நிற்கிறார்.

143cp8vc

கேரள தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,வயநாடு, மலப்புரம் ஆகிய இடங்களில் ஏப்ரல் 29 அன்றுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளனர். கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 30 தேதிக்கும் சேர்த்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில்தான் மையம் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையான பயணத்தை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.

அடுத்த 96 மணிநேரத்தில் இலங்கை கடற்பகுதியிலிருந்து நகர்ந்து வட தமிழகம் மற்றூம் தெற்கு ஆந்திர பிரதேசத்தை வந்து ஏப்ரல் 30 அன்று மாலை கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................