ஃபனி புயல்: 600 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்! தயார் நிலையில் 500 ஆம்புலன்ஸ்!

Cyclone Fani: மரங்கள், மின் கம்பங்களை வேருடன் சாய்த்து வருகிறது ஃபனி புயல். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஃபனி புயல்: 600 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்! தயார் நிலையில் 500 ஆம்புலன்ஸ்!

10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


Bhubaneswar: 

ஒடிசாவில் ஃபனி புயல் (Cyclone Fani) அடித்து நொறுக்கி வரும் அதே நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. 600 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இன்று காலை சரியாக 8 மணிக்கு ஒடிசாவை ஃபனி புயல் (Cyclone Fani) தாக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து வருகின்றன. 

குறிப்பாக புரி நகரில் பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. மின் வயர்கள், டெலிபோன் வயர்கள் துண்டாகியுள்ளன. விமான நிலையத்தை மறு உத்தரவு வரும் வரையில் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 
 

7v4g41ug


புயல் பாதிப்பு கட்டுக்கு கொண்டு வரப்படும் வரையில், பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களை மிகுந்த கவனத்துடன் மீட்பு படையும், சுகாதாரத்துறையும் கையாண்டு வருகிறது. 600-க்கும் அதிகமான கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 
 


அவசரத்திற்கு 500 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 242 மருத்துவமனைகளில் பவர் சப்ளை தொடர்ந்து வழங்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு மே 15 வரைக்கும் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................