This Article is From Nov 07, 2019

உருவாகிறது ‘Bulbul’ புயல்... - தமிழகத்தைத் தாக்குமா..?

Bulbul Cyclone - இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை இருக்காது என்ற போதும்...

உருவாகிறது ‘Bulbul’ புயல்... - தமிழகத்தைத் தாக்குமா..?

Cyclone Bulbul - தமிழகம் மற்றும் புதுவையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.

New Delhi:

வங்கக் கடலில் நாளை ‘புல் புல்' புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், மேலும் தெரிவிக்கையில், “மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு திசை நோக்கி நகர்ந்துள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. நாளை அது ‘புல் புல்' புயலாக உருவெடுக்கும். அந்தப் புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை இருக்காது என்ற போதும், மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாப்புள்ளது,” என்று கூறியுள்ளது. 
 

(With Inputs From PTI)

.