தாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்! வைரலாகும் க்யூட் வீடியோ!!

உயிரியல் பூங்கா நிர்வாகம் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். குட்டிச் சிங்கத்தின் வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

தாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்! வைரலாகும் க்யூட் வீடியோ!!

கடித்தது யார் என்று திரும்பிப் பார்க்கும் தாய் சிங்கம்.

ஸ்காட்லாந்து உயிரியல் பூங்காவில் தாய் சிங்கம் ஒன்றை பின்பக்கமாக இருந்து பயம் காட்டும் குட்டிச் சிங்கத்தின் க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. 17 வினாடிகள் ஓடக் கூடியதாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

தாய் சிங்கத்திற்கு 3 குட்டிகள் உள்ளன. அவற்றில் 2 முன்பக்கம் விளையாண்டு கொண்டிருக்க, ஒரேயொரு குட்டி மட்டும் தாய் சிங்கத்தின் பின்புறம் சத்தமின்றி நடந்து வருகிறது. தாயை நெருங்கியதும், 'வவ்'வென்று கத்தி பயம் காட்டியது. இதனால் அதிர்ச்சியுற்ற தாய்ச் சிங்கம், கர்ஜனையுடன் திரும்பிப் பார்க்க, அது தன் பிள்ளை என்று தெரிந்ததும் அமைதி அடைகிறது. 

வீடியோவைக் காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்
https://www.facebook.com/EdinburghZoo/videos/942056856166604/?v=942056856166604

குட்டி சிங்கத்தின் சேட்டைகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை எடின்பெர்க் உயிரியல் பூங்கா நிர்வாகம் சமூக வலைதளங்களில் பதிவிட, லைக்ஸ்கள் குவியத் தொடங்கின. 

இதை வாசிக்க: தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் !

'அய்யோ கடவுளே! என்ன ஒரு க்யூட்டான வீடியோ' என பலரும் இந்த வீடியோவுக்கு கமென்ட்ஸ் செய்துள்ளனர். குட்டிச் சிங்கங்கள் பிறந்து 2 மாதங்கள்கூட ஆகவில் என உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com