'மீண்டு வரும் சீனா' - நோயில் இருந்து விடுபட்டவர்கள் 'பிளாஸ்மா' தானம் 

இந்த மருத்துவமனையில் இருந்து கொரோனா நோய் தொற்று நீங்கி நலமடைந்து சென்றவர்கள் தங்களது பிளாஸ்மாக்களை தானம் செய்ய முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்

'மீண்டு வரும் சீனா' - நோயில் இருந்து விடுபட்டவர்கள் 'பிளாஸ்மா' தானம் 

இந்த பிளாஸ்மாவை கொண்டு 12 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

ஹைலைட்ஸ்

  • இந்த பிளாஸ்மாவை கொண்டு 12 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்
  • 'மீண்டு வரும் சீனா' - நோயில் இருந்து விடுபட்டவர்கள் 'பிளாஸ்மா' தானம்
  • பிளாஸ்மாவை (குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம்)
Wuhan/Shanghai:

சீனாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், தங்களது பிளாஸ்மாவை (குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம்) வுஹானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருகின்றனர் என்று இந்த கொரோனா வைரஸை ஆய்வு செய்யும் அறிவியல் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்த பிளாஸ்மா தானம் செய்துள்ள அனைவரும் 'ஜியாங்சியா' என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் பாரம்பரிய சீன மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக, சிகிச்சை பெற்று நலமடைந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது நலமடைந்தவர்களிடன் இருந்து பெறப்பட்டுள்ள இந்த பிளாஸ்மாவை கொண்டு 12 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெரும் சிலர் சிகிச்சை அளித்த 12 முதல் 24 மணி நேரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக இந்த சிகிச்சையில் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் சிகிச்சை முறைகளை மெருகேற்றி வருவதாகவும், தங்கள் சிகிச்சையோடு சேர்த்து இந்த பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

வுஹானில் உறுதிப்படுத்தப்பட்ட பல கொரோனா வழக்குகளை கொண்ட முக்கிய மருத்துவமனையான வுஹான் 'ஜின்யின்டன்' மருத்துவமனையின் தலைவர் Zhang Dingyu கூறுகையில், இந்த மருத்துவமனையில் இருந்து கொரோனா நோய் தொற்று நீங்கி நலமடைந்து சென்றவர்கள் தங்களது பிளாஸ்மாக்களை தானம் செய்ய முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஷாங்காய் நகரத்தில் இருந்து வரும் தகவல்களின்படி அங்கு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 124 நோயாளிகள் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும், அவர்களில் 14 பேர் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கு உதவ தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய விருப்பம் காட்டியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

"மருத்துவமனையில் இருந்து நலமடைந்து வரும்போது, என்னால் எனது பிளாஸ்மாவை தானம் செய்யமுடியும் என்று மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடமிருந்து அறிந்துகொண்டேன். இது மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்" என்று கொரோனா நோயில் இருந்து மீட்கப்பட்ட 'லியு' என்ற குடும்பப்பெயர் கொண்ட நோயாளி கூறினார். மேலும் பிறரால் காப்பாற்ற பட்ட நானும் பிறரை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.