உலகின் விலை உயர்ந்த காரை வாங்குகிறாரா ரொனால்டோ?

இந்த காரை ரொனால்டோ 11 மில்லியன் யூரோவுக்கு வாங்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த கார் உலக மோட்டார் ஷோ 2019ல் அறிமுகமானது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
உலகின் விலை உயர்ந்த காரை வாங்குகிறாரா ரொனால்டோ?

உலகின் விலை உயர்ந்த கார் 'புகாட்டி லா வாய்ச்சர் நொய்ர்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.


Rome: 

உலகின் விலை உயர்ந்த கார் 'புகாட்டி லா வாய்ச்சர் நொய்ர்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

புகாட்டி, இன்னும் இந்த காரின் அதிகாரப்பூர்வ உரிமையாளரின் பெயரை அறிவிக்கவில்லை. ஸ்பெயினில் உள்ள ஒரு விளையாட்டு பத்திரிக்கை இந்த காரின் உரிமையாளர் ஜுவெண்டாஸ் அணிக்காக ஆடும் பிரபல போர்ச்சுக்கல் வீரர் என்று சூசகமாக தெரிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் அது ரொனால்டோ என்ற கணிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு இந்த காரை வோக்ஸ்வேகன் முன்னாள் சேர்மன் ஃபெர்டினான்ட் வாங்கவுள்ளதாக செய்தி பரவியது.

qkmgd3a8

இதனை ரொனால்டோ 11 மில்லியன் யூரோவுக்கு வாங்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த கார் உலக மோட்டார் ஷோ 2019ல் அறிமுகமானது. 

ஆனாலும், ரொனால்டோவால் இந்த காரை 2021ல் தான் ஓட்ட முடியும். காரணம், இதன் மாதிரியில் இன்னும் சில மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளதாம்.

இந்த கார் 1936 மற்றும் 1938ல் வெளியான 4 புகாட்டி கார்களின் மார்டன் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரொனால்டோ, ஏற்கெனவே மெர்சிடஸ் சி க்ளாஸ் ஸ்போர்ட்ஸ் கூப்பே, ரோல்ஸ் ராய்ஸ் பாண்தம், ஃபெராரி 599 ஜிடிஓ, லாம்போகினி அவென்டேடொர் எல்பி700-4 மற்றும் ஆஷ்டன் மார்டின் டிபி9, பெனலி காண்டினன்டல் ஜிடிசி ஸ்பீட் ஆகிய கார்களை வைத்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................