துப்பாக்கி கை நழுவியதால் பயந்தோடிய திருடன்! வைரல் வீடியோ

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இ-ஸ்டோரில் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
துப்பாக்கி கை நழுவியதால் பயந்தோடிய திருடன்! வைரல் வீடியோ

அமெரிக்கா நாடு கொலராடோ மாகாணத்தில் உள்ள இ-ஸ்டோர் ஒன்றில் கொள்ளை அடிக்க வந்த திருடன், பயந்து தப்பியோடும் வீடியோ சமூக வலைத்ததளத்தில் வைரலாகி உள்ளது.

இ-ஸ்டோரில் கொள்ளயடிக்க திட்டமிடும் திருடன், கவுண்டரில் இருந்த பணியாளரை நோக்கி துப்பாக்கியை காண்பிக்க முயல்கிறார். எதிர்பாராத விதமாக, திருடனின் கையில் இருந்த துப்பாக்கி நழுவி கவுண்டருக்குள் விழுகிறது. அதனால், அச்சம் அடைந்த திருடன் இ-ஸ்டோரில் இருந்து தப்பியோட முயற்சிக்கிறார்.

 
 

வேகமாக ஸ்டோரை விட்டு வெளியேறிய திருடன், திரும்பிப் பார்க்காமல் பயந்தோடும் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது. சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த காட்சி, வைரலாகி உள்ளது.

அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பணியாளர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இ-ஸ்டோரில் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................