This Article is From Oct 23, 2019

குற்ற விகிதத்தில் யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடம் - அரசு தரவு

2017ஆம் ஆண்டிற்கான வருடாந்திர குற்றத்தரவு ஒரு வருட கால தாமத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது. 

குற்ற விகிதத்தில் யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடம் - அரசு தரவு

2017 ஆண்டில் டெல்லி குற்றங்களில் 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது

New Delhi:

தேசிய குற்றப்பதிவு ஆணையம் யூனியன் பிரதேசங்களில் டெல்லிதான் கூடுதல் குற்ற விகிதத்தை பதிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆண்டில் டெல்லி குற்றங்களில் 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. 

நாட்டில் பதிவான மொத்த வழக்குகளில் 4.9 சதவீதமாகும். 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்திர குற்றத்தரவு ஒரு வருட கால தாமத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது. 

இதில் குஜராத் (6.7), கேரளா (13.1), மத்திய பிரதேசம் (7.6) மகாராஷ்டிரா (9.3), தமிழ்நாடு (8.4), உத்தர பிரதேசம் (12) ஆகிய மாநிலங்கள் யூனியன் பிரதேசமான டெல்லியை விட அதிகமான வழக்குகளைக் கொண்டுள்ளன.

2017 ஆம் ஆண்டில் தேசிய தலைநகரில் பதிவு செய்யப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நாடு முழுவதும் பதிவான மொத்த வழக்குகளில் 4.9 சதவீதமாகும். 

மொத்தம் 2,44,714 வழக்குகளில், 2,32,066 பேர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் (ஐபிசி), 12,648 சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் (எஸ்.எல்.எல்) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள என்.சி.ஆர்.பி, ஐபிசி மற்றும் நாட்டின் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களால் வரையறுக்கப்பட்டுள்ளபடி, குற்றத் தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் மொத்தம் 3,147 கொள்ளை வழக்குகள் 9,828 திருட்டு வழக்குகள், மற்றும் 2,976 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.