சொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்!!

தாத்தாவை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்!!

ரத்தக்கறை படிந்த சட்டைத் துணி வயலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.


Banda, Uttar Pradesh: 

சொத்து தகராறு காரணமாக 65 வயதாகும் தனது தாத்தாவை 18 வயது இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பந்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

பந்தாவில் உள்ள சண்டி என்ற கிராமத்தை சேர்ந்த 65 வயதாகும் மோதிலால் பால் என்பவருக்கு நிலம் உள்ளது. தனது நிலத்தில் 22 பிக்கா பகுதியை மூத்த மகன் சபஜீத்துக்கும், 21 பிக்கா பகுதியை இளைய மகனின் மனைவிக்கும் கொடுத்துள்ளார். 

மீதம் இருந்த 40 பிக்கா நிலத்தை அவர் தன்னிடத்தில் வைத்துக் கொண்டார். இதில், சபஜீத்தின் மகன் பிரதீப் தங்களுக்கு கூடுதல் நிலம் வேண்டும் என்று மோதிலாலிடம் தகராறு செய்திருக்கிறார். 

வாக்குவாதம் கைகலப்பாக மாறி, மோதிலாலை கோடரியால் பிரதீப் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி பிரதீப்பை கைது செய்தனர். 

அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி, வயலில் ரத்தக்கறையுடன் காணப்பட்ட துணிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................