மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார் கவுதம் காம்பீர்!

மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை பாஜக அறிவித்திருக்கிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார் கவுதம் காம்பீர்!

டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி உருவாகுவதில் இழுபறி நீடிக்கிறது.


New Delhi: 

பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நபரான மீனாட்சி லேகி புது டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். 

டெல்லியில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இவர்களின் 4 பேர் தற்போதைய எம்.பி.க்கள் ஆவார்கள். 

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சாந்தினி சவுக் தொகுதியிலும், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். 

முன்னாள் டெல்லி பாஜக தலைவர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா மேற்கு டெல்லியிலும், தெற்கு டெல்லியில் ரமேஷ் பிந்துரியும் களம் காண்கின்றனர். 

இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீர் கடந்த மாதம்தான் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................