அமெரிக்க மளிகை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பசு சாண வரட்டி -ட்விட்டர் அலப்பரைகள்

புகைப்படத்தில் 10 வரட்டி கொண்ட பாக்கெட் உள்ளது. இந்த தயாரிப்பு “மத நோக்கங்களுக்காக” மட்டுமே “சாப்பிட முடியாதது” என்று வாடிக்களையாளர்களுக்காக லேபிளில் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மளிகை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பசு சாண வரட்டி -ட்விட்டர் அலப்பரைகள்

நியூ ஜெர்சியில் எடிசனில் உள்ள மளிகைக்கடையில் கிடைக்கிறது. விலை 2.99 டாலர் மட்டுமே

இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அமெரிக்க கடையில் மாட்டுச் சாணம் விற்கப்படுவதை புகைப்படத்துடன் வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாட்டுச் சாணம் இந்திய மதிப்பில் ரூ. 215க்கு விற்கப்படுகிறது. 

பத்திரிகையாளர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் “என் உறவினர் இதை எனக்கு அனுப்பினார். நியூ ஜெர்சியில் எடிசனில் உள்ள மளிகைக்கடையில் கிடைக்கிறது. விலை 2.99 டாலர் மட்டுமே. எனது கேள்வி: இந்த மாட்டுச் சாணம் டெஸி மாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா அலல்து யாங்கி மாடுகளிலிருந்து வந்ததா?” என்று கேட்டுள்ளார். 

புகைப்படத்தில் 10 வரட்டி கொண்ட பாக்கெட் உள்ளது. இந்த தயாரிப்பு  “மத நோக்கங்களுக்காக” மட்டுமே “சாப்பிட முடியாதது” என்று வாடிக்களையாளர்களுக்காக லேபிளில் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ட்விட் பதிவிற்கு பலரும் நகைச்சுவையான கமெண்டுகளை தொடர்ந்து தெரிவித்தபடி  உள்ளனர். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news

More News