உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது!

உலக நாடுகளின் வல்லரசு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 11 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது!
Paris, France:

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 லட்சத்தினை கடந்திருக்கிறது. இவற்றில் 75 சதவிகிதம் பேர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களாவார்கள்.

ஒட்டு மொத்தமாக 35,00,517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,46,893 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,43,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளின் வல்லரசு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 11 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் வெளிவந்துள்ள இந்த புள்ளிவிவரங்கள் மொத்த பாதிப்பின் ஒரு பகுதிதான். ஏனெனில் பல நாடுகள் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே  கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. புதியதாக சோதனைகளை அதிகப்படுத்தும் பட்சத்தில் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.