This Article is From May 28, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 42.75 சதவீதமாக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது 86,110 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 67,691 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,266 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 42.75 சதவீதமாக அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் 42.75 சதவீதமாக உள்ளனர்.
  • கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது 86,110பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,266 பேர் குணம் அடைந்துள்ளனர்
New Delhi:

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 42.75 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,266 பேர் குணம் அடைந்துள்ளனர். 

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது 86,110 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 67,691 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,266 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

நாட்டில் குணம் அடைவோரின் சதவீதம் 42.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் இல்லாத அளவுக்கு 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இன்று மட்டும் தமிழகத்தில் 639 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 145 பேரை கொரோனா பலி வாங்கியுள்ளது. 

.